இது இந்த மகாபாரதக் கதையின் 11 ஆவது பகுதி. இதன் முந்தைய பகுதிகளைக் கேட்டுவிட்டீர்களா? இல்லை என்றால் கேட்டுவிட்டு இந்த வாரப் பகுதியைத் தொடருங்கள். கதையை ஆழமாய் ரசிக்க அது உதவும்.
உடல் துர்நாற்ற்றம் நீங்கி சுகந்தம் தவழும் மேனியளாய் வந்த சத்தியவதிக்கு இனியேனும் திருமணம் செய்து வைக்க பெற்றோர் ஆசைப்பட்டனர். ஆயினும் சத்தியவதி சம்மதிக்கவைல்லை. அவள் எதிர்பார்த்தது ஒரு ராஜ குடும்பத்து சம்பந்தம். பராசரரே சொல்லியிருக்கிறாரே?
சத்தியவதி மீன் வியாபாரத்தில் தந்தைக்கு உதவத் தொடங்கினாள். தனியே வண்டி கட்டிக்கொண்டு போய் வெளியூரிலிருந்து மீன்கள் கொள்முதல் செய்து வந்தாள். அவள் வீரமும் துணிச்சலும் கொண்ட ஒரு க்ஷத்திரியப் பெண்போல் கம்பீரமாய வாழ்ந்தாள்.
அப்போது தான் அந்த எதிர்பாராத சந்திப்பு நிகழ்ந்தது. மன்னர் சாந்தனுவை அவள் சந்திக்க நேர்ந்த சூழலை இவ்வாரக் கதையில், தீபிகாவின் குரலில், 'சொல்லாமல் விட்ட சுவடிகள்' மூலம் கேட்டு ரசியுங்கள்.
Podden och tillhörande omslagsbild på den här sidan tillhör
Deepika Arun. Innehållet i podden är skapat av Deepika Arun och inte av,
eller tillsammans med, Poddtoppen.