பாரத ரத்னா இசைமேதை எம்.எஸ். சுப்புலட்சுமியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாகிறது. இப்படத்தில் எம்.எஸ்.சுப்புலட்சுமி வேடத்தில் ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளன.'ஜெர்சி' புகழ் கவுதம் தின்னனுரி இயக்குகிறார். அல்லு அரவிந்த், பன்னி வாஸ், ராக்லைன் வெங்கடேஷ் இணைந்து பிரம்மாண்டமாக தயாரிக்கின்றனர். இப்படம் அவரது சிறு வயது இசைப் பயணம் முதல் சர்வதேச புகழ் வரை பதிவு செய்யும். இவ்வேடத்திற்கு சாய் பல்லவி முதல் தேர்வாக இருந்தார், ஆனால் கால்ஷீட் பிரச்சனையால் விலகினார். ருக்மிணி வசந்த், நயன்தாரா, திரிஷா பெயர்களும் பரிசீலிக்கப்பட்டன. இறுதியில் ராஷ்மிகா தேர்வானார்.எம்.எஸ்.சுப்புலட்சுமி பிறந்தநாளான செப்டம்பர் 16 அன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
Podden och tillhörande omslagsbild på den här sidan tillhör
Maalaimalar.com. Innehållet i podden är skapat av Maalaimalar.com och inte av,
eller tillsammans med, Poddtoppen.